விஷு கொண்டாட்டம் சோகம்: பட்டாசை பாத்திரத்துக்குள் வைத்து வெடித்ததில் மாணவன் உயிரிழப்பு

சிறுவனை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு கொயிலாண்டி அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.
விஷு கொண்டாட்டம் சோகம்: பட்டாசை பாத்திரத்துக்குள் வைத்து வெடித்ததில் மாணவன் உயிரிழப்பு
Published on

கோழிக்கோடு,

கேரளம் மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கொயிலாண்டி அருகே உள்ள கொரங்காடு தெருவை சேர்ந்தவர் அத்வைத் (வயது 16). இவன் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று அவன் தனது நண்பர்களுடன் விஷூ பண்டிகையை கொண்டாடினான். அப்போது நண்பர்களுடன் நூதன முறையில் பட்டாசு வெடிப்பது குறித்து யூடியூப் வீடியோ பார்த்தான்.

அந்த வீடியோவில் இருந்தவாறு அத்வைத் நண்பர்களுடன் எவர்சில்வர் பாத்திரத்துக்குள் சக்தி வாய்ந்த பட்டாசு வைத்து வெடிக்க செய்தான். அப்போது பாத்திரம் சிதறிய தோடு அதன் துகள்கள் அத்வைத்தின் உடலில் குத்தி துளைத்தது. இதனால் நரம்புகள் அறுந்தது. மேலும் கையில் படுகாயம் ஏற்பட்டது. சிறுவனை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு கொயிலாண்டி அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சிறுவனின் நண்பர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து கொயிலாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் எந்த பட்டாசை வெடித்தான் மற்றும் விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com