கேரளத்தில் இன்று விஷு பண்டிகை

விஷு பண்டிகையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வழக்கத்தை விட முன்ன தாக, இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
கேரளத்தில் இன்று விஷு பண்டிகை
Published on

சபரிமலை,

சித்திரைத் திருநாள் என்று அழைக்கப்படும் தமிழ் வருடப்பிறப்பு நேற்று தமிழகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கேரளத்தில் விஷு என்பது மலையாள நாட் காட்டியின் படி மேஷம் (மேடம்) மாதத்தின் முதல் நாள் ஆகும். மேடம் மாதம் என்பது தமி ழில் சித்திரை மாதம் ஆகும். 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில், சூரியனின் பெயர்ச்சி அடிப்படையில் இன்று (புதன்கிழமை) விஷு கொண்டாடப்படுகிறது.

கேரளத்தில் விஷுவை முன்னிட்டு விஷுக்கனி காணல் மலையாள மக்களின் மிக முக்கிய மான சடங்காகும். மஞ்சள், அரிசி, வெற்றிலை பாக்கு, தங்க ஆபரணங்கள், நாணயங்கள், புதிய ஆடைகள், புனித நூல்கள். வெள்ளிப் பொருட்கள், ரூபாய் நோட்டு, மாம்பழம், பலாப் பழம், கண்ணாடி, விளக்கு ஆகியவற்றைக் ஒரு தட்டில் அழகாக பூக்களால் அலங்கரித்து. பூஜையறையில் ஒரு கண்ணாடி வைத்திருப்பார்கள். காலையில் வீட்டில் உள்ள அனைவரும் கண்ணாடியில் தெரியும் பழங்கள், நகைகள், நாணயங்கள் மற்றும் புத்தாடைகளை பார்க்க வேண்டும். இது தான் விஷுக்கனி காணல் என்பதாகும்.

இவ்வாறு காண்பதன மூலம் ஆண்டு முழுவதும் சுபிட்சமாக, ஐஸ்வர்யமாக, இருப்பார்கள் என்பது ஐதீகம். வீடுகளில் குடும்பத்தின் பெரியவர்கள் இளையவர்களுக்கு ஆசீர்வாதம் செய்து, ஆடைகளும், பணமும் அன்பளிப்பாக அளிப்பார்கள். பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

விஷு பண்டிகையையொட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வழக்கத்தை விட முன்ன தாக, இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து 4 மணி முதல் காலை 7 மணி வரை பக்தர்கள் கனி தரிசனம் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஷூ கனி தரிசனம் காண, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சப ரிமலை அய்யப்பன் கோவிலில் குவிந்து உள்ளனர்.

விஷுவை முன்னிட்டு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பிரசாத் நம் பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். அதேபோல், குருவாயூர் கிருஷ்ணன் கோவில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில். கரிக்ககம் சாமுண்டி தேவி கோவில், பழஞ்சிரை தேவி சிறையின்கீழ் சார்க்கரை தேவி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் விஷு பண்டிகையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com