விஷு பண்டிகை; சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
விஷு பண்டிகை; சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
Published on

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து சித்திரை மாத பூஜைக்காக கோவில் நடை ஏப்ரல் 10-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் 11-ந்தேதி முதல் வழக்கமான பூஜை, வழிபாடு தொடர்ந்து நடைபெறும்.

மாத பூஜை மற்றும் விஷு பண் டிகை சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 18-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும். இந்த நிலையில் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு தரிசன ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் நடைபெற்று வருவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com