ஹைதராபாத்தை, ‘பாக்யநகர்’ என பெயர் மாற்றம் செய்ய பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள் - யோகி ஆதித்யநாத்

ஹைதராபாத்தை, பாக்யநகர் என பெயர் மாற்றம் செய்ய பாஜனதாவுக்கு வாக்களியுங்கள் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தை, ‘பாக்யநகர்’ என பெயர் மாற்றம் செய்ய பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள் - யோகி ஆதித்யநாத்
Published on

ஹைதராபாத்,

ஹைதராபாத்தில் கோஷாமஹால் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ராஜா சிங் லோத்துக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ராஜா சிங்குக்கு பிரசாரம் மேற்கொள்வதற்காக நான் வந்துள்ளேன். காரணம், அவர் ஹைதராபாத்தை பாக்யநகராக பெயர் மாற்றுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார். ஹைதராபாத் பாக்யநகராக மாறவேண்டும் என்றால், தெலுங்கானாவில் பா.ஜனதா ஆட்சி அமைக்க நீங்கள் ஆதரவளிக்கவேண்டும் என்று கூறினார்.

மேலும் நல்லாட்சி மற்றும் வளர்ச்சியின் மூலம் இந்தியாவை ராம ராஜ்ஜியத்தின் படி கட்டமைப்பதற்கான பொறுப்பை பா.ஜனதா ஏற்றுள்ளது. இதில், தெலுங்கானாவும் பங்களிக்கவேண்டும். பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு, தெலுங்கானா தனி மாநிலமாக உருவான தினத்தை கொண்டாடும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com