வாக்காளர் அடையாள அட்டை: ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?

வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை: ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?
Published on

டெல்லி,

வாக்காளர் அடையாள அட்டை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள ஆவணமாகும். வாக்களிக்க மட்டுமின்றி முக்கியமான அடையாள ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்த முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அதை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய முடியும். அதேபோல், ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், அதனை தொலைத்திருந்தால் ஆன்லைனில் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். அது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

* டிஜிட்டல் வாக்காளர் அட்டையை இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in என்ற பக்கத்திற்குச் செல்லவும்.

* நீங்கள் ஏற்கனவே அக்கவுண்ட் தொடங்கி இருந்தால், உங்கள் மொபைல் எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி லாக் இன் செய்யலாம்.

* புதிய பயனர் என்றால், 'Sign Up' ஆப்ஷனை பயன்படுத்தி மொபைல் எண் மற்றும் இமெயில் முகவரியைக் கொடுத்து புதிய கணக்கை உருவாக்கிக் கொள்ளவும்.

* லாக் இன் செய்த பிறகு E-EPIC என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். உடனே மொபைல் எண் அல்லது வாக்காளர் பட்டியலில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட E-EPIC (வாக்காளர் பட்டியலில் உள்ள நம்பர்) எண் கேட்கும்.

* அதை கிளிக் செய்தால் உங்கள் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும். அந்த ஓடிபி கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.

* ஒடிபி சரிபார்க்கப்பட்டதும், டவுன்லோடு e-EPIC என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் கிளிக் செய்தால், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்யப்படும்.

* வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் விவரங்களுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இல்லெயெனில் இந்த இந்த ஆப்ஷன் பயன்படுத்த முடியாது.

* மொபைல் எண் இணைக்காதவர்கள் பார்ம் 8 பயன்படுத்தி தங்களின் மொபைல் எண்ணை இணைத்துக்கொள்ள முடியும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com