22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களுக்கான சிறப்பு தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது.
22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல்களுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொண்டது.

அதன்படி தமிழ்நாடு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மீதி உள்ள 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் மாதம் இப்பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அதற்கான முன்தயாரிப்பு பணிகளை முடிக்குமாறு அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், டெல்லி உள்பட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இப்பட்டியலில் உள்ளன. அங்கும் திருத்தப்பணி முடிவடைந்தால், நாடு முழுவதும் முடிவடைந்ததாக கருதப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com