சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி ராஜஸ்தான் 59.43% தெலுங்கானா 56.17% வாக்குகள் பதிவு

சட்டசபை தேர்தலில் 3 மணி நிலவரப்படி ராஜஸ்தான் 59.43 சதவீதமும் , தெலுங்கானாவில் 56.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.
சட்டசபை தேர்தல்: 3 மணி நிலவரப்படி ராஜஸ்தான் 59.43% தெலுங்கானா 56.17% வாக்குகள் பதிவு
Published on

ஜெய்ப்பூர்,

200 சட்டசபை தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதியம் 1 மணி நிலவரப்படி 41.53% வாக்குகள் பதிவாகி இருந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி சுமார் 55% வாக்குகள் பதிவாகி இருந்தது. மாலை 3 மணி நிலவரப்படி அங்கு 59.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

முதல்வர் சந்திரசேகரராவ் சித்திபெட் தொகுதியில் அவரது வாக்கை பதிவு செய்தார். அமைச்சர் கே.டி.ராமா ராவ் ஹைதராபாத்தில் அவரது வாக்கை பதிவு செய்தார்.

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிலிம் நகர் கலாச்சார மையத்தில் வாக்களித்தார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 49.15 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி 56.17 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com