துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
Published on

புதுடெல்லி,

நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 21-ந்தேதி நிறைவு பெற்றதில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தின் எப்-101 அரங்கில் தொடங்கி மாலை 5 மணியோடு நிறைவு பெற்றது. இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியவுடன் முதல் ஆளாக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கைப் பதிவு செய்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  மொத்தம் உள்ள 782 வாக்குகளில் 770 வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் 12 பேர் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. 

சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு, தேர்தல் முடிவு இன்றே அறிவிக்கப்பட உள்ளது. எம்பி.க்களின் ஆதரவு அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com