ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டம் குறைந்தது 100 நாட்களாவது நடக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற கூட்டம் குறைந்தது 100 நாட்களாவது நடக்க வேண்டும்: வெங்கையா நாயுடு
Published on

நூற்றாண்டு விழா

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பொtது கணக்கு குழு நூற்றாண்டு விழா நடைபெற்றது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பொது கணக்கு குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி (காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசும்போது, முறைகேடுகளை கண்டறிய பொது செலவினங்களை பொது கணக்கு குழு ஆராய்கிறது. சட்டத்தின் பார்வையில் மட்டுமே ஆராயாமல் பொருளாதாரம், விவேகம், ஞானம், உரிமை ஆகியற்றின் அடிப்படையிலும் ஆராய்கிறது என குறிப்பிட்டார்.

மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேசும்போது, தங்கள் செயல்பாடுகள் மூலம் நாடாளுமன்ற குழுக்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பு செய்து வருகின்றன. இந்த குழுக்கள் மினி நாடாளுமன்றம் போன்றதுதான். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற பயனுள்ள தளமாகவும் இருக்கிறது என குறிப்பிட்டார்.

100 நாட்கள் நாடாளுமன்ற கூட்டம்

இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டிலும் நாடாளுமன்ற கூட்டம் குறைந்தது 100 நாட்கள் நடைபெற வேண்டும். மாநிலங்களில் சட்டசபை கூட்டம் குறைந்தது 90 நாட்கள் நடைபெற வேண்டும்.

இதில் அரசியல் ரீதியில் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்.

இலவசங்கள்

விரையங்களை சரிபார்க்க சமூக பொருளாதார பார்வையில் வளங்களை பயன்படுத்துவதை பொது கணக்கு குழு ஆராய வேண்டும்.

வெளிப்படையான காரணங்களுக்காக இலவசங்களை அரசுகள் வழங்குகிற ஒரு சூழலில் நாம் எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது பரந்த விவாத்துக்கான ஒரு தருணம் ஆகும்.

ஏழை எளியோருக்கு நல திட்டங்களையும், சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுகளுக்கு உண்டு. அதே நேரத்தில், நலன் மற்றும் வளர்ச்சி நோக்கங்களை ஒத்திசைப்பது குறித்த பரந்த விவாதம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com