முதல்-மந்திரியாக பதவியேற்றபின் முதன்முறையாக குருவாயூர் கோவிலில் வீ.டி.சதீசன் சாமி தரிசனம்

வி.டி.சதீசன் எல்லா மாதமும் ஒரு முறையாவது குருவாயூர் கோவிலுக்கு வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.
முதல்-மந்திரியாக பதவியேற்றபின் முதன்முறையாக
குருவாயூர் கோவிலில் வீ.டி.சதீசன் சாமி தரிசனம்
Published on

குருவாயூர்,

கேரளம் மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசன் பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று காலை 6.40 மணிக்கு வந்தார். அங்கு அவருக்கு குருவாயூர் ஆலய சேர்மன் ஏ.வீ.கோபிநாத், ஆலய நிர்வாக அதிகாரி ஒ.பீ.அருண்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அவர் குருவாயூர் கோவிலில் நடைபெற்ற கேரளம் வருவாய்த்துறை மந்திரி ஏ.பி.அணில்குமார் மகன் திருமண விழாவில் கலந்து கொண்டு. மணமக்களை வாழ்த்தினார். அவருடன் உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடன் இருந்தனர்.

அங்கிருந்து காலை 7.45 மணிக்கு குருவாயூர் கோவிலுக்கு வந்த வீ.டி.சதீசன் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். ஆலய நடையில் வெண்ணெய்யும். கதலி பழங்களும் வைத்து வணங்கினார். அவருக்கு ஆலய மேல்சாந்தி பரமேஸ்வ ரன் நம்பூதிரி பிரசாதங்கள் வழங்கினார். பின்னர் அவர் தனது எடைக்கு எடை வெண்ணெய் துலாபாரம் செலுத்தினார். அதன்படி அவர் 71 கிலோ எடை கொண்ட வெண்ணெய்யை காணிக்கையாக செலுத்தினார். அதனைத்தொடர்ந்து கிழக்கு நடையில் உள்ள கணபதிக்கு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தார். அங்கிருந்து திருப்பாறையாறு ராமர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அவருக்கு பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து எர்ணாகுளத்திற்கு புறப்பட்டு சென்றார். வி.டி.சதீசன் எல்லா மாதமும் ஒரு முறையாவது குருவாயூர் கோவிலுக்கு வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com