தமிழக, புதுச்சேரி அரசுகளுக்கு வி.டி.சதீசன் கடிதம்

மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
வி.டி. சதீசன்
Published on

திருவனந்தபுரம்,

போதைப்பொருள் கடத்தலை தடுக்க கேரளாவின் புதிய அரசு தீவிர நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன் ஒரு பகுதியாக மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலை தடுக்க உதவுமாறு அண்டை மாநிலங்களுக்கு முதல்-மந்திரி வி.டி. சதீசன் கடிதம் எழுதியுள்ளார்.

போதைப்பொருள்

அதில் அவர், 'கேரளாவை கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியுடன் இணைக்கும் எல்லைப்பகுதிகள், முக்கிய நெடுஞ்சாலைகள், சுற்றுலாத்தலங்கள், மாணவர் வலையமைப்புகள் மற்றும் நகர்ப்புற வினியோக மையங்கள் ஆகியவற்றை போதைப்பொருள் மாபியாக்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும். இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்' என கூறியுள்ளார்.

கடிதம்

எனவே மாநிலங்களுக்கு இடையேயான இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒரு கூட்டு செயல் திட்டத்தைத் தயாரிப்பதற்காக, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com