ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; மோகன் குப்தா நீதிமன்ற காவல் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு

ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழலில் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு துறை முகவர் மோகன் குப்தாவின் நீதிமன்ற காவல் வருகிற 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு; மோகன் குப்தா நீதிமன்ற காவல் வருகிற 20ந்தேதி வரை நீட்டிப்பு
Published on

புதுடெல்லி,

மிக மிக முக்கிய பிரமுகர்கள் பயன்பாட்டுக்காக, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில், ரூ.423 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் கிறிஸ்டியன் மிச்செல் என்ற இடைத்தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மற்றொரு இடைத்தரகரான ராஜீவ் சக்சேனா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பின் அமலாக்க துறை அவரை கைது செய்தது. இதன்பின் அவர் அரசு தரப்பு சாட்சியாக ஆனார்.

அவர் அளித்த தகவலின்பேரில் சூசென் மோகன் குப்தா என்ற பாதுகாப்பு துறை முகவரை, பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்க துறை கைது செய்தது. அவரது நீதிமன்ற காவலை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் வருகிற 20ந்தேதி வரை நீட்டித்து இன்று உத்தரவிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com