டெல்லியில் இருந்து உத்தரவு வருவதற்காக காத்திருக்கிறேன்; எடியூரப்பா பேட்டி

டெல்லியில் இருந்து உத்தரவு வருவதற்காக காத்திருக்கிறேன் என எடியூரப்பா பேட்டியளித்து உள்ளார்.
டெல்லியில் இருந்து உத்தரவு வருவதற்காக காத்திருக்கிறேன்; எடியூரப்பா பேட்டி
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் - மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை குமாரசாமி நேற்று வழங்கினார். கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.

புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்-மந்திரியாக குமாரசாமி தொடர வேண்டும் என்றும், நிர்வாக ரீதியாக எந்த முடிவுகளும் எடுக்க கூடாது எனவும் குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தி உள்ளார்.

இதனிடையே, கர்நாடகாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடந்து வருகிறது. இதில் சட்டசபை கட்சி தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

கர்நாடக பா.ஜ.க. செய்தி தொடர்பாளரான மாளவிகா அவினாஷ் கூறும்பொழுது, கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலமான 105 எண்ணிக்கையை குறிப்பிட்டு ஆட்சி அமைக்க உரிமை கோருவோம் என கூறியுள்ளார்.

பெங்களூருவின் சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு வந்த எடியூரப்பா கூறும்பொழுது, சங்பரிவார் அமைப்பின் மூத்த தலைவர்களின் ஆசியை பெற வந்துள்ளேன். டெல்லியில் இருந்து உத்தரவு வருவதற்காக காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். இதன்பின் எந்த நேரத்திலும் ராஜ்பவன் செல்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com