மனிதனை போல் 2 கால்களில் நடந்து சென்று, சாகசம் செய்த குரங்கு

மனிதனை போன்று பாலம் மீது நடந்து சென்று, பின்னர் கைப்பிடி ஓரத்தில் ஏறி குதித்து, குதித்து குரங்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
மனிதனை போல் 2 கால்களில் நடந்து சென்று, சாகசம் செய்த குரங்கு
Published on

புதுடெல்லி,

விலங்கு கூட்டத்தில் மனிதனுக்கு இணையான அறிவை கொண்டது என அறிவியலாளர்கள் ஏற்று கொண்ட விலங்கு குரங்கு. மனிதனை போன்று அமர்வது, தலையில் பேன் பார்ப்பது உள்ளிட்ட செய்கைகளை குரங்குகள் செய்வதுண்டு. சில குரங்குகள் சிகரெட் பிடிப்பதும் கூட உண்டு.

குரங்குகளை கொண்டு தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துவதும் உண்டு. சேட்டை செய்யும் குழந்தைகளை குரங்கு சேட்டைக்காரன் என்றும் கூறுவது உண்டு. இதுபோன்று மனிதர்களுடன் பல வகையில் ஒத்து போகின்ற குணாதிசயங்களை அவை கொண்டிருக்கின்றன.

இதேபோன்று, சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்து உள்ளது. வெளிநாடு ஒன்றில் பாலத்தின் மீது குரங்கு ஒன்று மனிதரை போல் இரண்டு கால்களால் நடந்து செல்கிறது. அதனை, பின்னால் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்தபடி தொடர்கிறார்.

அதனை கவனித்தும் கண்டுகொள்ளாமல் வேகவேகமுடன் நடந்து சென்ற குரங்கு, ஒரு கட்டத்தில் திடீரென பாலத்தின் ஓரத்தில் இருந்த பாதுகாப்பு சுவரின் மீது ஏறி, குதித்து, குதித்து சென்றது சாகசம் செய்வது போன்று இருந்தது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதனை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். பலர் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com