

சூரத்,
குஜராத்தின் சூரத் நகரில் கட்டிடம் கட்டுமான பணி ஒன்று நடைபெற்று வந்தது. இதில், பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், இன்று மதியம் திடீரென கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில், தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர். பலர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், சுவர் இடிந்ததில் சிக்கி உயிரிழந்த 4 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. எனினும், வேறு எவரேனும் சிக்கி கொண்டனரா? என கண்டறிய மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடருகின்றன.