காந்தியின் இந்தியா வேண்டுமா? கோட்சே இந்தியா வேண்டுமா? - ராகுல் கேள்வி

காந்தியின் இந்தியா வேண்டுமா அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
காந்தியின் இந்தியா வேண்டுமா? கோட்சே இந்தியா வேண்டுமா? - ராகுல் கேள்வி
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று வாக்குச்சாவடி அளவிலான காங்கிரஸ் தொண்டர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

உங்களுக்கு காந்தியின் இந்தியா வேண்டுமா? அல்லது கோட்சேவின் இந்தியா வேண்டுமா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். ஒரு கையில் அன்பும், சகோதரத்துவமும் - மற்றொரு கையில் வெறுப்பும், அச்சமும். காந்தி பயமில்லாதவர், வருடக்கணக்கில் சிறையில் இருந்தாலும் ஆங்கிலேயர்களுடன் அன்புடன் பேசினார். ஆனால் சாவர்கர், தன்னை மன்னித்து விட்டுவிடும்படி ஆங்கிலேயர்களுக்கு கடிதம் எழுதியவர்.

பிரதமர் மோடி, இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்பது பற்றி பேசுகிறார். ஆனால் அவரது சட்டை, ஷூக்கள், அவர் செல்பி எடுக்க பயன்படுத்தும் செல்போன் ஆகியவை சீனாவில் உற்பத்தி செய்தவை. மசூத் அசாரை விடுவித்தது பா.ஜனதா. நமது 2 பிரதம மந்திரிகள் உயிர்தியாகம் செய்தவர்கள். நாம் யாருக்கும் தலைவணங்கியது இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com