

புதுடெல்லி,
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது.
இதில் என்.ஐ.டி. என்னும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் நிரந்தர வளாகங்களை அமைப்பதற்கு 2021-2022 ஆண்டு வரையில் மொத்த செலவு ரூ.4,371 கோடியே 90 லட்சம் என மறுமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.எச்.எப்.எல். என்று அழைக்கப்படுகிற இந்துஸ்தான் புளூரோகார்பன்ஸ் நிறுவனத்தையும், அதன் ஆலையையும் மூடி விடுவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு தனது ஒப்புதலை அளித்தது.