போர் எதிரொலி: பெங்களூருவில் 42 விமானங்கள் ரத்து

போர் எதிரொலி: பெங்களூருவில் 42 விமானங்கள் ரத்து

இதனால் அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
Published on

பெங்களூரு,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ளன. பதிலுக்கு அரபு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங் குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியா வில் இருந்து அந்த நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி விமான நிலையத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் 4-வது நாளாக ரத்து செய்யப்பட்டன.

இன்று மட்டும் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் 21 விமானங் கள் வருகையும், இங்கிருந்து செல்லக்கூடிய விமானங்கள் 21-ம் அடங்கும். விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு தேவையான வசதிகள் 2-வது முனையத்தில் செய்யப்பட்டு உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com