போர் பதற்றம்: 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - சிபிஎஸ்இ அறிவிப்பு

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமான், சவுதி அரேபியா, கத்தாரிலும் சிபிஎஸ்இ தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
போர் பதற்றம்:  10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு -  சிபிஎஸ்இ அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் மூண்டதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் நாளை நடைபெற இருந்த 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சிபிஎஸ் இ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பக்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் நாளை (மார்ச் 2ஆம் தேதி) நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 3ம் தேதி மத்திய இடைநிலை கல்வி வாரியம் மீண்டும் ஆலோசித்து மார்ச் 5ம் தேதி முதல் திட்டமிட்டுள்ள தேர்வுகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியம் உலகம் முழுவதும் 28 நாடுகளில் 240 பள்ளிகளை கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com