வருங்கால போர் முறைகளை கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு திறனை வலுவாக்க வேண்டியது அவசியம் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
வருங்கால போர் முறைகளை கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்
Published on

புதுடெல்லி,

ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்தின் நவீன போர் யுத்திகள் குறித்து நாம் பேசும்போது, வரும் நாட்களில், போர் என்பது இன்னும் ஆக்ரோஷமாகவும், கணிக்க முடியாததாகவும் இருக்கும்.

நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, எதிர்காலத்தின் போர் முறைகள் மாறக்கூடும். சைபர் மற்றும் விண்வெளிகளங்கள் "புதிய போர் மண்டலங்களாக" வேகமாக உருவாகி வருகின்றன. இதனால், இந்த பல்முனை சவால்களை எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருக்க வேண்டும். மேலும், முழுமையான திறன் மேம்பாடு மற்றும் சீர்திருத்தங்கள் இரண்டிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com