மீ டூ விவகாரம் : பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மேகாலயா பெண் குற்றச்சாட்டு

பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மீ டூ இயக்கம் மூலம் மேகாலயா பெண் குற்றம்சாட்டி உள்ளார்.
மீ டூ விவகாரம் : பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மேகாலயா பெண் குற்றச்சாட்டு
Published on

மேகாலயா காசி சமூகத்தை சேர்ந்த பெண் பல தசாப்தங்களுக்கு முன்னர், இரண்டு கிறிஸ்துவ மத குருமார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டி உள்ளார். 44 வயதாகும் அந்த பெண் சமூக ஊடகப் பதிவில் இந்த குற்றச்சாட்டுகளைச் கூறி உள்ளார். ஒரு கத்தோலிக்க குழு இது குறித்து உள் விசாரணையைத் தொடங்கும் என்று கூறியுள்ளது.

அந்த பெண் கூறி இருப்பதாவது;-

தான் 5 வயதாக இருக்கும் போது பாதிரியார் தனது மர்ம உறுப்பை காட்டினார். மேலும் அதை தொடும்படி கூறினார். இது குறித்து குடும்ப உறுப்பினர்களிடம் கூறியபோது அவர் அறைந்து விட்டார் மற்றும் "இத்தகைய கதைகளை உருவாக்கக் கூடாது" என்று கூறினார். ஆனால் தொடர்ந்து துஷ்பிரயோகம் நடந்து கொண்டிருந்தது.

பருவ வயதை அடைந்தவுடன் பாதிரியார் என்னை அணுகினார். "கர்ப்பிணி ஆகி விடுவேன் என்பது குறித்து பயம் எனக்கு இருந்தது". அந்த நபர் தற்போது மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என கூறி உள்ளார்.

இரண்டாவது பாதிரியார் தனது மேஜை டிராயரில் சாக்லெட் இருப்பதாக கூறி குழந்தைகள் சாக்லெட்டை எடுக்கும் போது டேபிளின் மற்றொரு பக்கத்தில் இருந்து அவர்களது தொடைகளை கைகளால் பற்றி கொள்வார் என கூறினார்.

எனது பருவ வயதில் இரண்டாவது முறைகேடு பற்றி யாருடனும் பேசவில்லை. ஏன் என்றால் முதல் பாதிரியாரால் இதைவிட அதிக துஷ்பிரயோகம் நடந்து உள்ளது என கூறினார். "இது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது போல் உணர்ந்தேன். அவர் ஷில்லாங்கில் மத பிரசாரத்தை தொடர்கிறார்" என கூறினார்.

குழந்தை பருவத்தில் எனக்கு இது தெரியாது, நான் அப்பாவியாக இருந்தேன். பயம் மற்றும் ஆழமான அவமானத்தில் நான் நீண்ட காலமாக வாழ்ந்தேன். மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தேன். மருத்துவமனையில் இரண்டு முறை கடுமையான சிகிச்சை அளிக்கபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

#MeToo இயக்கத்தால் பாலியல் தவறான எதிரான உலகளாவிய பிரச்சாரத்தால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

இந்தியாவில் 46 சதவீத பாலியல் பலாத்காரம் குடும்ப உறவினர்கள், வளர்ப்பு தந்தை போன்றவர்களால் ஏற்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com