

புதுடெல்லி,
குழந்தைகளின் மனநலம் குறித்த யுனிசெப் அமைப்பின் வருடாந்திர நூல் வெளியீட்டு நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. அதை தொடங்கிவைத்த மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, கொரோனா 2-வது அலையின்போது நான் மத்திய ரசாயன மற்றும் உரத்துறை ராஜாங்க மந்திரியாக இருந்தேன்.
2-வது அலை உச்சத்தில், அத்தியாவசிய மருந்துகள் கோரி பல்வேறு மாநில முதல்-மந்திரிகள் தினமும் செய்யும் தொலைபேசி அழைப்புகளால் திணறிப்போனேன். ஆஸ்பத்திரி நிர்வாகங்களிடம் பேசுமாறும் பலர் தொடர்ந்து வேண்டுகோள் விடுப்பார்கள். அந்த காலகட்டத்தில் நான் மிகுந்த மனஅழுத்தத்துக்கு உள்ளானேன். என் மனநலம் வெகுவாக பாதிக்கப்பட்டது என்று கூறினார்.