'நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்' - பிரிவுபசார உரையில் ஐகோர்ட்டு நீதிபதி

தனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தியதாக பிரிவுபசார உரையில் ஐகோர்ட்டு நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு சக நீதிபதிகள், வக்கீல்கள் இணைந்து பிரிவுபசார விழா நடத்தினர்.

இதில் நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் பேசும்போது, 'நான் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்தேன் என்பதை இங்கே ஒப்புக்கொண்டாக வேண்டும். எனது குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம் வரை அங்கே இருந்தேன். அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன்' என்று கூறினார்.

ஆனால் தனது பணி நிமித்தமாக 37 ஆண்டுகள் அமைப்பை விட்டு விலகி இருந்ததாக கூறிய சித்தரஞ்சன்தாஸ், எனினும் அமைப்புக்கு திரும்ப தயாராக இருப்பதாகவும், எந்த உதவிக்காகவும் அவர்கள் அழைத்தால் சென்று அவர்கள் வழங்கும் பணியை செய்வேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர், 'எனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தினேன். அது செல்வந்தரோ, இடதுசாரியா, காங்கிரசோ, பா.ஜனதாவோ அல்லது திரிணாமுல் காங்கிரசோ யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே நடந்து கொண்டேன்' என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com