கையிருப்பில் உள்ள ரூ.1.15 லட்சம் கோடி தங்கம் விற்கப்பட்டதா? ரிசர்வ் வங்கி விளக்கம்

₹1.14 லட்சம் கோடி தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றுவிட்டதா? என எழுந்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது
 ரிசர்வ் வங்கி
Published on

உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் உள்நாட்டு நாணய மதிப்பின் வீழ்ச்சி ஆகியவை இந்தியாவின் அந்நிய செலாவணி இருப்புக்கு பெரும் சவாலாக மாறியuள்ளன. இதையடுத்து அந்நிய செலாவணி வெளியேற்றத்தை குறைத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலையேற்றம் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் மீதான இறக்குமதி வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதி செலவினங்களுக்கு மத்தியில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை தக்க வைக்கும் முயற்சியாக இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 1.14 லட்சம் கோடி மதிப்பிலான கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

நிதி அமைச்சகம்

ஆனால் இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் மறுத்துள்ளது.இதனை உறுதிபடுத்தும் விதமாக இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-26-ம் ஆண்டுக்கான சமீபத்திய வருடாந்திர அறிக்கையில், அந்த நிதியாண்டில் மத்திய வங்கியின் தங்கம் கையிருப்பு உண்மையில் அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com