பாட்டி இறந்த தகவலை தீப்கேவிடம் கூறவில்லையா? ஆதாரத்தை வெளியிட்ட டெல்லி போலீஸ்

பாட்டி இறந்த தகவலை திப்கேவிடம் போலீசார் தெரிவிக்கவில்லை என அவரது தாய் குற்றம் சாட்டினார்.
அபிஜீத் திப்கே
Published on: 

புதுடெல்லி,

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஒருங்கிணைப்பாளர் அபிஜீத் திப்கே உள்ளிட்டவர்களை டெல்லி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தனர். இதற்கிடையே, ஹிங்கோலி மாவட்டத்தில் வசித்து வந்த அபிஜீத் திப்கேயின் பாட்டி சாவித்ரிபாய் சங்கர்ராவ் திப்கே (வயது85) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலை உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று காலை நடைபெற்றது.

அபிஜீத் திப்கேவின் குடும்பத்தினர், இறுதிச்சடங்கில் அவர் பங்கேற்பதற்காக உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று டெல்லி போலீசாரிடம் பலமுறை கேட்டுக்கொண்டனர். ஆனால், போலீசார் அவரைவிடுவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பாட்டி இறந்த தகவலை திப்கேவிடம் போலீசார் தெரிவிக்கவில்லை என அவரது தாய் குற்றம் சாட்டினார். ஆனால் இதை போலீசார் மறுத்தனர். அத்துடன் வீடியோ ஆதாரத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர்.

அதில் திப்கேயிடம் ஒரு பெண் போலீசும், சாதாரண உடையில் இருக்கும் போலீஸ்காரர் ஒருவரும் இந்த தகவலை தெரிவிப்பதும், பாட்டியின் இறப்புக்கு அவர்கள் இரங்கல் தெரிவிப்பதும் பதிவாகி இருந்தது.

அத்துடன் திப்கே வீடு திரும்ப விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அவர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால் போலீசாரின் இந்த விளக்கத்துக்கு பதிலளித்துள்ள திப்கே, பாட்டியின் மர ணம் குறித்து அறிந்ததும், அவருடன் வசித்து வந்த தனது உறவினரை தொடர்பு கொண்டு பேசுவதற்கு செல்போனை கேட்டபோது போலீசார் தர மறுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com