ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டை கொண்டாடினர்.
ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்
Published on

ஸ்ரீநகர்,

2021 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக கூடும் இடங்களில், இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் பொது இடங்களில் பாட்டு, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் புதுச்சேரியில் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. இதனை கேக் வெட்டி, ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள், பாட்டு பாடி, நடனமாடி புத்தாண்டை கொண்டாடினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com