பத்மாவதி திரைப்பட விவகாரம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக படத்தை பார்க்க வேண்டும் மத்திய மந்திரி

பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக படத்தை பார்க்க வேண்டும் என மத்திய மந்திரி பிரேந்திர சிங் கூறிஉள்ளார்.
பத்மாவதி திரைப்பட விவகாரம் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக படத்தை பார்க்க வேண்டும் மத்திய மந்திரி
Published on

ஐதராபாத்,

பத்மாவதி படத்தில் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த தீபிகா படுகோனே மற்றும் படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு தொடர்ச்சியாக மிரட்டல்கள் விடுக்கப்படுகிறது. படத்திற்கு ராஜஸ்தான், உத்தரபிரதேச உள்ளிட்ட மாநில அரசுக்களும் எதிர்ப்பு தெரிவித்தது, இதனையடுத்து பத்மாவதி திரைப்படம் வெளியிடும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

பத்மாவதி திரைப்படத்திற்கு எதிர்ப்பு வலுத்து உள்ளநிலையில் மத்திய மந்திரி பிரேந்திர சிங் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முன்னதாக படத்தை பார்க்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். என்னுடைய கருத்து மிகவும் தெளிவானது. சில வரலாற்று உண்மைகள் நம்முடைய சிந்தனைகளுடன் ஒத்திசையாது. திரைப்படத்திற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் முதலில் படத்தை பார்க்க வேண்டும். படத்தில் அவர்களை காயப்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், பின்னர் அவர்கள் அந்த காட்சிகளை நீக்க கோரிக்கை விடுக்க வேண்டும், அதற்கான வழிமுறையை பின்பற்ற வேண்டும், என கூறிஉள்ளார்.

நம்முடைய நாட்டின் வரலாற்றை யதார்த்தமான முறையில் மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இதுபோன்ற படங்கள் வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது. அனைத்து வழிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ள இயக்குநர்கள் மிகவும் அதிகமான வலியை எதிர்கொள்கிறார்கள். ஆனால் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். வரலாற்று உண்மைகள் மிகவும் முக்கியமானவை. அவைகள் சரியான கண்ணோட்டத்தில் ஆராயப்பட வேண்டும் என கூறிஉள்ளார் பிரேந்திர சிங்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com