

புதுடெல்லி
அது வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று முடிவடைந்த வாரத்தில் 91 பெரிய நீர்த்தேக்கங்களில் 30,903 பில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே இருந்தது. அது மொத்த கொள்ளளவில் 20 சதவீதம் மட்டுமே என்றது.
நாட்டிலுள்ள மொத்த நீர்த்தேக்க அளவான 253.388 பில்லியன் கன மீட்டரில் இந்த 91 நீர்த்தேக்கங்களின் 157.799 பில்லியன் கன மீட்டர் 62 சதவீதமாகும். மேலும் இந்த 91 நீர்த்தேக்கங்களில் 37 நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் கேந்திரங்களாகவும் விளங்குகின்றன.இவை 67 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
நேற்றைய கொள்ளளவு இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டில் இருந்த தண்ணீர் அளவில் 126 சதவீதமாகும். கடந்த பத்தாண்டுகளில் சராசரியாக இருந்த தண்ணீர் அளவில் 107 சதவீதமாகும்.