வயநாடு: அட்டகாசம் செய்து வரும் யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரம்

முட்டிகொம்பன் யானையை பிடிக்க பயிற்சி பெற்ற அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு: அட்டகாசம் செய்து வரும் யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீவிரம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக விவசாய நிலங்களில் யானை புகுந்து விளைச்சலை சூறையாடி வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த யானையை அந்த பகுதி மக்கள் 'முட்டிக்கொம்பன்' என்று அழைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை சோர்ந்த ராஜீவ் தனது விளைநிலத்திற்குள் புகுந்த யானையை விரட்ட சென்றார். அப்போது யானை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். விவசாயியின் மரணத்திலும் சம்பந்தப்பட்டிருந்ததால், வனதுறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து வேறு ஒரு வனப்பகுதியில் விடுவதாக கூறினார். இதையடுத்து காட்டு யானையை பிடிக்க உயர் அதிகாரிகளின் அனுமதியை வனத்துறையினர் பெற்றனர்.

இதனை தொடர்ந்து அந்த யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்த வனத்துறையினர், கலூர்குன்னு அருகே அந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க முயன்றனர், ஆனால் அந்த நடவடிக்கை முடிவடைவதற்குள் அந்த யானை காட்டிற்குள் தப்பி ஒடிவிட்டது. தற்போது யானையை பிடிக்க பயிற்சி பெற்ற வனவிலங்கு கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருவதாகவும், அதற்கு மயக்க மருந்து செலுத்தும் முயற்சிகள் விரைவில் மீண்டும் தொடங்கும் என்றும் வனத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com