வயநாடு நிலச்சரிவு: காணாமல் போன 5 பேரை தேடும் பணி தீவிரம்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 பிரிவுகளாக மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு
Published on

கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அடுத்த கல்லாடி பகுதி யில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நேற்று முன்தினம் கல்லாடி மீனாட்சி பாலம் பகுதியில் சுரங் கப்பாதை நுழைவுவாயில் அருகே 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் சுரங்கப்பாதை நுழைவுவாயில் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் இருந்து நீரோடு மண் கீழ்நோக்கி அடித்து வரப்பட்டது. அதோடு அங்குள்ள சாலை, பாலத்தை மண் மூடியது.

9 பேர் மீட்பு

அங்கு சாலையில் நின்ற கர்நாடக மாநிலம் ராமநகர் பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை நிலச்சரிவு அடித்து சென்றது. மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர். ஆனால், சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் நிலச்சரிவில் சிக்கினர். தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், வயநாடு போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்து 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் மேப்பாடியில் உள்ள ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இரவு நேரமான தாலும், கனமழை பெய்ததாலும் நேற்று முன்தினம் இரவு தேடும் பணி நிறுத்தப்பட்டது.

கதி என்ன?

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன 5 பேரை தேடும் பணி நடந்தது. சுரங்கப்பாதை அமைக்கும் பணி யில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனத்தின் மேலாளர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த விக்ரம் ராணா, என்ஜினீயர் ராகுல், பீகாரை சேர்ந்த ஆப ரேட்டர் முகமது இம்ரான், மேற்கு வங்கத்தை சேர்ந்த சர்வேயர் ராகேஷ் குஜத், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சர்வேயர் அஸ்ஹருதீன் அன்சாரி ஆகிய 5 பேர் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. அவர்களின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. மேலும் உயிரிழந்த 5 பேரில், தனியார் நிறுவனத்தின் ஆபரேட்டரான மத் திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரபான், போர்மேன் பிகாஷ் குமார், ஜார்க் கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அன் சந்திரா பான் ஆகிய 3 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியானது உறுதி செய்யப்பட்டது. இவர்களது உடல்கள் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மோப்ப நாய்கள்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 பிரிவுகளாக மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் காணாமல் போனவர்களை சினிபர், கடாவர் வகையை சேர்ந்த 2 மோப்ப நாய்கள் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்தவர்களை தேடினர்.சுரங்கப்பாதை நுழைவுவாயில் பகுதியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் 7 முதல் 10 அடி உயரம் வரை மண் குவித்து வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலச்சரிவால் அடித்து வரப்பட்ட மண்ணை அகற்றி, காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை சுற்றிலும் வசித்து வந்த 33 குடும்பங்களை சேர்ந்த 93 பேர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com