'மோடி கேர்' திட்டத்திலிருந்து வெளியேறுவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு

'மோடி கேர்' திட்டத்திலிருந்து வெளியேறுவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். #Modicare #MamtaBanerjee
'மோடி கேர்' திட்டத்திலிருந்து வெளியேறுவதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு
Published on

கொல்கத்தா

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் (Modi Care) கொண்டு வரப்படும் என்று மோடி அரசு உறுதியளித்துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ஏழை, எளிய மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும்.மேலும், தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு 11,000 கோடி ரூபாய் தேவைப்படும் என நிதி ஆயோக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் கணித்துள்ளன. இதற்கான செலவினங்களில் 40 சதவீதம் மாநில அரசுகள் பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மாநில அரசுகளின் நிதிநிலையை ஆராயாமல் மத்திய அரசே தன்னிச்சையாகத் திட்டங்களை அறிவித்து செலவு செய்யும்படி திணிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், `மோடி கேர்' திட்டம் எங்களுக்குத் தேவையில்லை என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் கிருஷ்ணாநகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி கூறியதாவது :-

'எங்கள் மாநிலத்தில் ஏற்கெனவே போதுமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. எங்கள் மாநிலம் அரும்பாடுபட்டு சேர்த்த வளங்களை, மோடி கேர் திட்டத்துக்காக `வீணடிக்க முடியாது'.

நீங்கள் 40 சதவிகிதம் மாநிலங்கள் அளிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள் ஏன்? அதை தீர்மானிப்பதற்கு முன் எங்களுடன் கலந்து பேசினீர்களா? நீங்கள் பணம் செலுத்த எங்களை கட்டாயப்படுத்த முடியாது. எங்களிடம் பணம் இருந்தால் அதை நாங்கள் சொந்தமாக செய்து கொள்வோம் . இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ஒன்றும் இல்லை (மோடி கேர்) மத்திய அரசாங்கத்தின் உத்தரவை நாங்கள் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com