கோர்க்காலாந்து கோரிக்கை: சிக்கிம்மின் ஆதரவிற்கு மேற்கு வங்கம் கண்டனம்

கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கு சிக்கிம் கொடுத்துள்ள ஆதரவிற்கு மேற்கு வங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோர்க்காலாந்து கோரிக்கை: சிக்கிம்மின் ஆதரவிற்கு மேற்கு வங்கம் கண்டனம்
Published on

கொல்கதா

மேற்கு வங்க அமைச்சர் பார்தா சாட்டர்ஜி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு மாநிலத்தின் விவகாரத்தில் மற்றொரு மாநிலம் ஏன் தலையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாக உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கோர்க்காலாந்து விவகாரம், முழுக்க முழுக்க மேற்கு வங்க மாநிலத்தின் விவகாரம் என்று சொல்லியுள்ளது. மலையகப்பகுதிகளில் நடந்த வருவது அரசியல் ரௌடியிசம் என்று குறிப்பிட்ட மேற்கு வங்க அமைச்சர் மலையகப் பிரதேசத்தில் ஜூன் 8 ஆம் தேதி முதல் நடந்து வரும் வன்முறைகளை பட்டியலிட்டுள்ளார். சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் இடையூறும், பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் கோர்க்காலாந்து தனி மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததோடு ராஜ்நாத் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தனி மாநிலம் அமைப்பது டார்ஜிலிங் மலைப்பகுதி மக்களின் அரசியல்சட்டப்பூர்வ கோரிக்கைக்கு உடன்படுவதோடு அப்பகுதியில் அமைதியையும் கொண்டு வரும் என்றார். மேலும் சிக்கிம் மாநிலத்திற்கு அதனால் நிறைய பலன்கள் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com