மராட்டிய மாநிலத்தில் 3வது அலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறோம் - ஆதித்யா தாக்கரே

கொரோனா தொற்றின் 3வது அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவும் தயாராகி வருவதாக மராட்டிய மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
மராட்டிய மாநிலத்தில் 3வது அலையை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறோம் - ஆதித்யா தாக்கரே
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அங்கு நாளுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று மராட்டிய மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு இன்று ஒரே நாளில் 68,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 503 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தற்போது அங்கு 6,70,388 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்றின் 3வது அலை விரைவில் வரக்கூடும் என்று அந்த மாநிலத்தின் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், கொரோனா 3வது அலை இரண்டாவது அலையை விட வலுவானதா அல்லது பலவீனமானதா என்பதை இப்போது தீர்மானிக்க முடியாது. தடுப்பூசி இப்போதே உதவாவிட்டாலும், அது எதிர்காலத்தை பாதுகாக்க உதவும். இன்று அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கடந்த ஆண்டு நாம் உருவாக்கிய பணிக்குழுவை அடிப்படையாகக் கொண்டது. இந்த முடிவுகள் அறிவியல் மற்றும் மருத்துவ உண்மைகளின்படி எடுக்கப்படுபவை, அரசியலால் அல்ல என்று தெரிவித்தார்.

மேலும் 3வது அலை குறித்து பேசிய அவர், குறைத்து மதிப்பிடுவது இனி உதவாது என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். எனவே இப்போது நாங்கள் 3வது அலைக்குத் தயாராகி வருகிறோம். மாநிலத்தில் ஐந்து லட்சம் படுக்கைகள் உள்ளன, அவற்றில் 70% ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டவை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com