இங்கிருக்கும் நாங்கள் பயங்கரவாதிகள் கிடையாது - ரோஹிங்யா இஸ்லாமியர்கள்

இந்தியாவில் இருக்கும் நாங்கள் பயங்கரவாதிகள் கிடையாது என ஐதராபாத்தில் தங்கியிருக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் தெரிவித்து உள்ளனர்.
இங்கிருக்கும் நாங்கள் பயங்கரவாதிகள் கிடையாது - ரோஹிங்யா இஸ்லாமியர்கள்
Published on

ஐதராபாத்,

மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது. இந்நிலையில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 4 லட்சம் பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர்.

இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு உள்ளது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடங்கி உள்ளனர். இவ்வழக்கில் எங்கள் மத்தியில் எந்தஒரு பயங்கரவாத செயல்பாடும் கிடையாது என ரோஹிங்யா அகதிகள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது.

ரோஹிங்யா அகதிகளுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உள்ளது. அவர்களை தொடர்ச்சியாக இந்தியாவில் தங்குவதற்கு அனுமதிப்பது என்பது தேசத்திற்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. மியான்மர் அரசும் ரோஹிங்யா இஸ்லாமியர்களை திரும்ப பெறுவதாக கூறிஉள்ளது.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள், அவர்கள் அகதிகள் கிடையாது என்றார்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்கள் எங்களுடைய நாடு எங்களை சொந்த பூமியிலிருந்து விரட்டிவிட்டது, அடைக்கலம் கொடுத்த நாடும் எங்களை வெளியேற்ற உள்ளதாக மிரட்டுகிறது. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறிஉள்ளனர்.

ரோஹிங்யா இஸ்லாமியர்கள் முகாமில் இருக்கும் சையதுல்லா பஷார் பேசுகையில் நாங்கள் இங்கு பிரச்சனையை ஏற்படுத்த வரவில்லை. எங்களை பயங்கரவாதிகள் போன்று நடத்தாதீர்கள். யாரும் அகதிகளகாக விரும்பவில்லை. மியான்மர் அரசு இன அழிப்பில் ஈடுபட்டதால் நாங்கள் அங்கிருந்து தப்பி வந்தோம். அங்கு அமைதி திரும்பினால் நாங்கள் எங்களுடைய நாட்டிற்கு திரும்பி செல்ல தயாராக உள்ளோம், என கூறிஉள்ளார். பெரும்பாலானோர் கூழி வேலை செய்து வருகிறார்கள். மற்றொரு அகதி அப்துல் கரீம் பேசுகையில், எங்களுடைய சொந்த நாட்டிற்கு செல்ல எங்களுக்கும்தான் விருப்பம். உலகம் எங்களுக்கு ஆதரவு அளித்தால் நாங்கள் எங்கள் நாட்டிற்கு திரும்புவோம்.

உங்களுடைய நாட்டைவிட்டு விரட்டினால் இதயம் நொறுங்காது. நாங்கள் ஏழ்மையானவர்கள். எங்களுக்கு கொடுக்கப்படும் வேலையை நாங்கள் பார்க்கிறோம். மியான்மர் வன்முறை காரணமாக எங்களுடைய உறவினர்கள், குடும்ப உறுப்பினர்கள் கூட எங்களுடன் கிடையாது. சிலர் வங்காளதேசம் சென்றுவிட்டனர். சில இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா, சவுதி அரேபியா மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று உள்ளனர், என்றார்.

பஷார் மேலும் பேசுகையில், ரோஹிங்யா அகதிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் இடங்களில் தங்க வைக்குப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இன அழிப்பு கொள்கையை மியான்மர் ராணுவம் கொண்டு உள்ளது. எல்லோருக்கும் சம உரிமை என்ற கொள்கை அமலாகும் என நம்புகிறோம். என்றார். இந்தியா சூப்பர்பவர் நாடு என கூறும் அவர், மியான்மரில் எங்களுக்கு சம உரிமை கிடைக்கும் வரையில் இங்கு தங்கியிருக்க இந்தியா அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். சுல்தான் முகமது (65 வயது) பேசுகையில்,

எங்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு கிடையாது. எங்களுடைய உயிருக்கு பயந்துதான் இங்கு வந்து உள்ளோம். நாங்கள் யாரையும் மிரட்டவில்லை. எங்களுக்கு இந்திய அரசு அதிகமாக உதவி உள்ளது. எங்களுக்கு நல்ல இருப்பிடம் கிடைத்து உள்ளது. எங்களுக்கு கிடைக்கும் பணியை செய்கிறோம். போலீசார் வழக்கம்போல் வந்து சோதனை செய்கிறார்கள். அரசின் உதவியினாலே எங்களுக்கு அகதிகள் அடையாள அட்டை கிடைக்க பெற்றது. எங்களுக்கு இந்திய அரசின் ஆதரவு வேண்டும், என கூறிஉள்ளார். மியான்மரில் அமைதி திரும்பும் வரையில் எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவையானது என அகதிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com