நாங்கள் முட்டை வீசும் கலாசாரத்தை ஆதரிக்க மாட்டோம்; மந்திரி ஆர்.அசோக் பேட்டி

நாங்கள் முட்டை வீசும் கலாசாரத்தை ஆதரிக்க மாட்டோம் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.
நாங்கள் முட்டை வீசும் கலாசாரத்தை ஆதரிக்க மாட்டோம்; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
Published on

பெங்களூரு:

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மன்னிக்க மாட்டோம்

வீரசைவ-லிங்காயத் சமூகத்தில் லிங்காயத் தனி மத அடையாளம் வழங்க நான் எடுத்த முடிவிற்காக வருந்துவதாக சித்தராமையா தற்போது கூறியுள்ளார். அவரது பேச்சை லிங்காயத் மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள். நூற்றாண்டுகள் காலமாக மத விஷயத்தில் கர்நாடகம் நல்லிணக்கத்தை பேணி வருகிறது. ஆனால் அவர் வீரசைவ-லிங்காயத் சமூகத்தை பிரிக்க எடுத்த முயற்சிகளை யாரும் மறக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு தலைவர்கள் இல்லை. அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள். வீரசாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். விநாயகர் சிலைகள் வைக்கும் இடத்தில் அவரது படம் வைத்தால் என்ன தவறு. அதே நேரத்தில் கோட்சே படத்தை வைத்தால் நாங்கள் மன்னிக்கமாட்டோம். இது தவறு. இதனால் காந்தியின் நாட்டிற்கு அவமானம் ஏற்படும்.

ஆதரிக்க மாட்டோம்

சித்தராமையா இந்துக்கள் பற்றியும், இந்து மதம் குறித்தும் எப்போதும் குறைத்து பேசுகிறார். சிலர் கோபத்தில் அவரது கார் மீது முட்டை வீசியுள்ளனர். ஆனால் நாங்கள் முட்டை வீசும் கலாசாரத்தை ஆதரிக்க மாட்டோம்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தேசத்துரோகிகள் என்று சித்தராமையா சொல்கிறார். நானும் அந்த அமைப்பில் இருந்து வந்தவன் தான். நான் தேசத்துரோகியா?. ஏதாவது கருத்துகளை கூறி குழப்பத்தை ஏற்படுத்த கூடாது.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com