காஷ்மீர் பிரச்சனையை நாங்கள் மிகவும் சரியாக கையாள்கிறோம் அமித்ஷா சொல்கிறார்

காஷ்மீர் பிரச்சனையை நாங்கள் மிகவும் சரியாக கையாள்கிறோம் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசி உள்ளார். #AmitShah
காஷ்மீர் பிரச்சனையை நாங்கள் மிகவும் சரியாக கையாள்கிறோம் அமித்ஷா சொல்கிறார்
Published on

புதுடெல்லி,

மாநிலங்களவைவில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எம்.பி. அமித்ஷா பேசுகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மோடி அரசின் நடவடிக்கைகளை பாராட்டி பட்டியலிட்ட அமித்ஷா பாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கையை எடுத்து கூறினார். இந்திய ராணுவம் எடுத்த துல்லிய தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) வரலாற்று நடவடிக்கை. இதனால் உலக நாடுகள் இந்தியாவை மாற்று பார்வையில் பார்க்க தொடங்கியது. அமெரிக்கா, இஸ்ரேலை அடுத்து இந்தியாதான் தன்னுடைய நாட்டு வீரர்களை பாதுகாக்கிறது என உணர்ந்துக்கொண்டார்கள் என்றார்.

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசுகையில், காஷ்மீர் விவகாரம் இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீர் பாதுகாப்பாக உணர்ந்தது கிடையாது. காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் மிகவும் சரியாக கையாளுகிறோம் என்றார் அமித் ஷா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com