11 ஆண்டுகளில் 1.6 லட்சம் வீடுகளை கட்டி, கொடுத்துள்ளோம்: அரியானா முதல்-மந்திரி பெருமிதம்

காங்கிரஸ் கட்சி, வளர்ச்சியின் வேகத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயன்று கொண்டிருக்கிறது என சைனி கூறினார்.
11 ஆண்டுகளில் 1.6 லட்சம் வீடுகளை கட்டி, கொடுத்துள்ளோம்:  அரியானா முதல்-மந்திரி பெருமிதம்
Published on

சண்டிகார்,

அரியானாவில் முதல்-மந்திரி நயப் சிங் சைனி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த முறை அக்கட்சி ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டது.

இந்நிலையில், அரியானா முதல்-மந்திரி நிருபர்களிடம் பேசும்போது, காங்கிரஸ் கட்சி கூறுவதற்கு என்று எதுவும் இல்லை. அதனால், வளர்ச்சியின் வேகத்திற்கு இடையூறு ஏற்படுத்த அக்கட்சி முயன்று கொண்டிருக்கிறது.

Also Read
பிரதமர் நாற்காலியை நோக்கி பாய்ந்த பெண் எம்.பி.க்களால் பரபரப்பு
11 ஆண்டுகளில் 1.6 லட்சம் வீடுகளை கட்டி, கொடுத்துள்ளோம்:  அரியானா முதல்-மந்திரி பெருமிதம்

பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு விரைவாக வளர்ந்து வருகிறது. அரியானாவை எடுத்து கொண்டால், 11 ஆண்டுகளில் 1.6 லட்சம் வீடுகளை நாங்கள் கட்டி, கொடுத்துள்ளோம், நாங்கள் பல விசயங்களை செய்து வருகிறோம். அதனை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com