கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும் - எய்ம்ஸ் இயக்குனர்

கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும் - எய்ம்ஸ் இயக்குனர்

கறுப்பு பூஞ்சை தொற்று பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
Published on

புதுடில்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் மியூகோமைகோசிஸ் நோய் தாக்கி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சார்ஸ் வைரஸ் பரவியபோதும் ஒரளவிற்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கொரோனாவுடன் உடன் கட்டுப்பாடற்ற நீரிழிவு கறுப்பு பூஞ்சையின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

கறுப்பு பூஞ்சை பாதிப்பை தடுப்பது குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. இரத்ததில் சர்க்கரை அளவை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டீராய்டுகள் எடுத்துக்கொள்பவர்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும். மேலும் ஸ்டீராய்டுகளை எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com