பிரதமர் மோடி தலைமையில் அச்சமின்றி செயல்படுகிறோம் - வெளிநாடுகளின் மோதல்களை ஒப்பிட்டு யோகி ஆதித்யநாத் பேச்சு

ஈரான்-அமெரிக்கா இடையே நடந்து வரும் போரால் ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.

பிரதமர் மோடி தலைமையில் அச்சமின்றி செயல்படுகிறோம் - வெளிநாடுகளின் மோதல்களை ஒப்பிட்டு யோகி ஆதித்யநாத் பேச்சு
Published on

கோரக்பூர்

உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கோரக்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் உலக நாடுகளில் உள்ள சூழலையும், இந்தியாவிற்குள் காணப்படும் சூழலையும் ஒப்பிட்டு, மக்களுக்கு சுட்டி காட்டி பேசினார்.

அவர் கூறும்போது, ஈரான்-இஸ்ரேல் இடையேயும், ஈரான்-அமெரிக்கா இடையேயும் நடந்து வரும் போரால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏறக்குறைய ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டு உள்ளது.

Also Read
5 மாநில தேர்தல்; ரூ.400 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணம், பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்

பிரதமர் மோடி தலைமையில் அச்சமின்றி செயல்படுகிறோம் - வெளிநாடுகளின் மோதல்களை ஒப்பிட்டு யோகி ஆதித்யநாத் பேச்சு

நிலையற்ற தன்மையால் உலக நாடுகள் சிக்கியுள்ள சூழலில், பிரதமர் மோடி தலைமையின் கீழ் இந்தியா தொடர்ந்து நிலையான பாதையில் செல்கிறது. உலக அளவில் கூக்குரல் எழுகிறது. ஒழுங்கற்ற சூழல் உள்ளது. அராஜக நிலை காணப்படுகிறது.

நம் நாட்டிற்குள்ளோ, அற்புதம் வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற பிரதமர் மோடி தலைமையின் கீழ், நாம் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம். நம்முடைய வளர்ச்சிக்கான பயணத்தில் அச்சமின்றி முன்னே செல்வதற்காக பணியாற்றி கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com