

கோட்டா
தீபாவளியையொட்டி மக்களவை சபாநாயகர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உள்ளூர் பொருட்களை நாம் வாங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
ராஜஸ்தானின் கோட்டா நகருக்கு வருகை தந்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களுக்கு தன்னுடைய தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். அவர் கூறும்போது, நாட்டு மக்களுக்கும் மற்றும் ராஜஸ்தான் மாநில மக்களுக்கும் மனப்பூர்வ தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இது மனவுறுதிக்கான திருவிழா. நாம் ஒற்றுமையாக இருந்து முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்கான உறுதியான முடிவை எடுக்கும் நாளாக, இந்த தீபாவளி திருநாள் உள்ளது.
இந்த பண்டிகை கொண்டாட்டத்தில், உள்ளூர் தயாரிப்பு பொருட்களை நாம் அதிக அளவில் வாங்கி சமூகம் மற்றும் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்று அப்போது கூறினார்.
இந்த நன்னாளில் சமூகத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் சமத்துவம் ஆகியவை வலுப்பட நாட்டு மக்கள் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேபோன்று வரவுள்ள கோவர்த்தன பூஜை நிகழ்ச்சிக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.