பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளோம்: ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலின் ஓராண்டுக்குப் பிறகும் பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டுள்ளோம்: ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி  உமர் அப்துல்லா
Published on

கடந்த ஆண்டு இதே நாளில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர். நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது. பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டை முன்னிட்டு தலைவர்கள் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல் மந்திரி உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஓராண்டுக்குப் பிறகும், பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். ஜம்மு-காஷ்மீரை துன்பங்களிலிருந்தும் அப்பாவி மரணங்களிலிருந்தும் விடுவிப்பதற்கான நமது விருப்பத்தில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

அது மீண்டும் ஒருபோதும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்தையும் செய்ய நாம் உறுதியுடன் இருக்கிறோம். கோழைத்தனமான அந்த தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் நாங்கள் என்றும் ஒற்றுமையாக இருக்கிறோம். அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் பலியானவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com