மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் - ராகுல் காந்தி

மகளிர் இடஒதுக்கீடு நமது அரசமைப்பின் ஒரு பகுதி என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் - ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்றும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை ஆதரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பேசியுள்ளதாவது:

மகளிர் இடஒதுக்கீட்டை நிபந்தனையின்றி காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. மகளிர் இடஒதுக்கீடு நமது அரசமைப்பின் ஒரு பகுதி; அரசு முன்மொழிந்த இடஒதுக்கீட்டுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை மகளிர் மசோதா திருத்தம், தொகுதி மறுவரையறையை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முயற்சி செய்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்து, ஓபிசி, எஸ்சி எஸ்டி உரிமையை திருடுவதை அனுமதிக்க மாட்டோம்.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது.

அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 2029 மக்களவைத் தேர்தலின்போது இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையின் முடிவில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com