

புதுடெல்லி,
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இந்திய ராணுவம் குறித்து அவ தூறாக பேசியதாக உத்தரபிரதேசத்தில் அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இதில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு ராகுல் காந்திக்கு எதிரான மற் றொரு அவதூறு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்காத நிலையில் நேற்று மனு தாரரின் வக்கீல் கவுரவ் பாட்டியா சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் ஆஜராகி, ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகளை தனித்தனியாக விசாரிக்கவும், விரைவில் அதற்கான தேதியை அறிவிக்கவும் கேட்டுக் கொண்டார். மேலும் இந்த வழக்கு பட்டியலிடாமல் இருப்பதற்கு அவர் ஒன்றும் முக்கிய பிரமுகர் ஒன்றும் இல்லை எனவும், சம்மன் நிறுத்தி வைத்திருக்கும் பலனை அவர் அனுபவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'நீங்கள் நடைமுறையை பின்பற்றி விரைவாக விசாரிப்பதற்கான மனுத் தாக்கல் செய்யுங்கள். நாங்கள் அனை வரையும் சமமாகவே நடத்துகிறோம். நீங்கள் தனியாக மனுத் தாக்கல் செய்யுங்கள்' என்று தெரிவித்தனர்.