ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் - ஹர்ஷவர்தன்

ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளர்.
ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் - ஹர்ஷவர்தன்
Published on

புதுடெல்லி,

சீனாவின் இரு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் தரமற்றவையாக இருப்பது கண்டறியப்பட்டதால், அவற்றை பயன்படுத்த வேண்டாம் எனவும், வாங்கிய நிறுவனங்களிடமே திருப்பி அனுப்பி விடுமாறும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது.

இந்த நிலையில், ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்த பிறகு ரேபிட் டெஸ்ட் கிட் தயாரிப்பு பணி துவங்கும்.

மே மாதத்தில் ஆர்டி- பிசிஆர் சோதனைக் கருவிகளை மே மாதத்தில் நம்மால் தயார் செய்ய முடியும். மே 31 ஆம் தேதிக்குள் ஒரு லட்சம் டெஸ்ட் கிட்களை நம்மால் உற்பத்தி செய்ய முடியும். இந்தியாவில் கடந்த 7 நாட்களாக 80 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை . கடந்த 28 நாட்களாக 17 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com