வளர்ச்சி அடைந்த டெல்லிக்கான பயணத்தில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவோம்: முதல்-மந்திரி

டெல்லியை சிறந்த ஒன்றாக உருவாக்குவதற்கான பணியில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து பிரிவு மக்களும் ஈடுபடுவார்கள் என்றார்.

வளர்ச்சி அடைந்த டெல்லிக்கான பயணத்தில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவோம்:  முதல்-மந்திரி
Published on

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, நகரத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து என்னுடைய அரசு செயல்படும்.

வளர்ச்சி அடைந்த டெல்லி என்பதற்கான பயணத்தில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவோம். டெல்லியில் செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு தனி வேலையையும் நாங்கள் செய்வோம். அதில் பொதுமக்களையும் ஈடுபடுத்துவோம் என்றார்.

Also Read
விஜய்யின் வருமான வரி வழக்கில் இன்று தீர்ப்பு

வளர்ச்சி அடைந்த டெல்லிக்கான பயணத்தில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவோம்:  முதல்-மந்திரி

விடுதலை வாங்கி நூறாண்டை நோக்கி ஒட்டுமொத்த நாடும் செல்கிறது. 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியா, வளர்ச்சி அடைந்த டெல்லி என்ற தொலைநோக்கு பார்வையை பற்றி எப்போதெல்லாம் நான் பேசுகிறேனோ, அதுபற்றி இன்றைய இளைஞர்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள் என நான் புரிந்து கொள்கிறேன்.

அதற்கான பொறுப்புணர்வையும் அவர்கள் புரிந்து கொள்கிறார்கள் என கூறினார். டெல்லியை சிறந்த ஒன்றாக உருவாக்குவதற்கான பணியில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து பிரிவு மக்களும் ஈடுபடுவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com