பாபர் மசூதி இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் அறிக்கை

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் 26–வது பேரவை கூட்டம் அதன் தலைவர் மவுலானா ரபே ஹசானி நத்வி தலைமையில் ஐதராபாத்தில் நடந்தது.
பாபர் மசூதி இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் அறிக்கை
Published on

ஐதராபாத்,

கூட்டத்திற்கு பின்பு இந்த வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

பாபர் மசூதி இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களது நம்பிக்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பாபர் மசூதி கட்ட வேறு இடம் ஒதுக்கித் தந்தாலும் ஏற்க மாட்டோம். அந்த இடம் கடைசி வரை ஒரு மசூதியாகவே இருக்கும். இடித்துவிட்டாலும் பாபர் மசூதி தனது அடையாளத்தை ஒருபோதும் இழந்துவிடாது. ஷரியத் சட்டத்தின்படி அது ஒரு மசூதியாகவே நீடிக்கும்.

இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி கட்டுவதற்கான போராட்டம் தொடரும். சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்கில் பிரபல வக்கீல்கள் முஸ்லிம்களுக்காக வாதிடுவார்கள். முஸ்லிம் பெண்கள், ஷரியத் சட்டம் மற்றும் அரசியல் சாசனம் ஆகியவற்றுக்கு முத்தலாக் சட்ட மசோதா முற்றிலும் எதிரானது. அதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேறவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com