'காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்' - ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிப்பு

காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் என ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார்.
'காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்' - ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவிப்பு
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி என்ற தனிக்கட்சியை நடத்தி வருகிறார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க விருப்பம் தெரிவித்து, சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை ஷர்மிளா ஏற்கனவே சந்தித்தார்.

இந்நிலையில், நேற்று கட்சி கூட்டம் ஒன்றில் ஷர்மிளா பேசியதாவது:-

"தெலுங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள் பிளவுபடக்கூடாது என்பதற்காக, காங்கிரசுடன் இணையவோ அல்லது இணைந்து செயல்படவோ விருப்பம் தெரிவித்தேன். 4 மாதங்களாக நான் காத்திருந்தும், காங்கிரசிடம் இருந்து பதில் வரவில்லை. ஆகவே, காங்கிரஸ் கட்சியுடன் நமது கட்சி இணைப்பு இல்லை. தெலுங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். நான் பலர் தொகுதியில் போட்டியிடுவேன்."

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com