‘‘பத்மாவத் படத்தை ராஜஸ்தானில் வெளியிட மாட்டோம்’’ முதல்–மந்திரி வசுந்தரா ராஜே அறிவிப்பு

பிரச்சினைக்குரிய பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் பத்மாவத் என்ற பெயரில் சில மாற்றங்களுடன் 26–ந் தேதி திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.
‘‘பத்மாவத் படத்தை ராஜஸ்தானில் வெளியிட மாட்டோம்’’ முதல்–மந்திரி வசுந்தரா ராஜே அறிவிப்பு
Published on

மும்பை,

கர்னி சேனா அமைப்பு பத்மாவத் படத்தை திரையிட விடமாட்டோம் என்று மீண்டும் மிரட்டல் விடுத்து உள்ளது. ராஷ்ட்ரிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேன் சிங் நிருபர்களிடம் கூறும்போது பத்மாவத் படம் வெளியாகும் தியேட்டர்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம் என்று எச்சரித்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து, பத்மாவத் படம் ராஜஸ்தானில் வெளியாகாது என்று அந்த மாநிலத்தின் முதல்வர் வசுந்தரா ராஜே அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, பத்மாவத் பட பிரச்சினையை மக்களின் உணர்வுபூர்வ விஷயமாக அரசு பார்க்கிறது. எனவே ராஜஸ்தானில் படம் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் குலாம் சந்த் கடாரியாவிடம் கூறியிருக்கிறேன். ராணி பத்மினியின் தியாகம் என்பது மாநிலத்தின் மிகப்பெரிய கவுரவம். எங்கள் வரலாற்றில் பத்மினி வாழ்க்கையை முக்கியமான அத்தியாயமாக பார்க்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com