தமிழக மீனவர் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவோம்; திருச்சி எம்.பி. சிவா தகவல்

மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழக மீனவர் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுவோம்; திருச்சி எம்.பி. சிவா தகவல்
Published on

அப்போது அவர் கூறியதாவது:-

3 வேளாண் சட்டங்களும் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசாமல் அவசரகதியில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள். இது நடைமுறைக்கு வரும்போது குறைந்தபட்ச ஆதாரவிலை, அரசின் நேரடி கொள்முதல், பொது வினியோகத் திட்டம் ஆகிய மூன்றும் இல்லாமல் போய்விடும். அதனால்தான் அந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள். ஆனால் அரசு அதை பொருட்படுத்தவே இல்லை. இந்த சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதியிடமும் கேட்டோம். ஆனால் அவர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆக எல்லாம் அவசர கதியில் நடந்தது. எனவே, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை புறக்கணிப்பது என்று ஜனநாயக அடிப்படையில் 16 எதிர்க்கட்சிகள் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம்.

உபா சட்டம் என்பது அரசுக்கு ஆகாதவர்களை துன்புறுத்துவதற்கும், அடிபணிய வைப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகிறது. ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமாக இது இல்லை. ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருக்கிறது. அதை தடுக்கும் பொறுப்பு எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கு இருக்கிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் கொரோனா அணுகுமுறையில் உள்ள தோல்விகள், இலங்கை-தமிழர் மீனவர் பிரச்சினை, புதிய கல்விக்கொள்கை, ஜி.எஸ்.டி. அமலாக்கத்தில் தோல்வி போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து தி.மு.க. பேசும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com