நல்லி எலும்பு கறி வைக்காததால் ஆத்திரம்: திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்...!

நல்லி எலும்பு கறியால் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்லி எலும்பு கறி வைக்காததால் ஆத்திரம்: திருமணத்தை நிறுத்திய மணமகன் குடும்பத்தினர்...!
Published on

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும், நஹ்டியா பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமகள் வீட்டார் சார்பில் விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இடம்பெற்றிருந்தன.

விருந்தில் மணமகன் குடும்பத்தினர் கூறியிருந்த நல்லி எலும்பு கறி இடம்பெறவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகன் குடும்பத்தினர் பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். அப்போது, நல்லி எலும்பு கறி வைக்காமல் பெண் வீட்டார் தங்களை அவமதித்துவிட்டதாக கூறி மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com